search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிவு உபசார விழா"

    • அனைத்து மாணவர்களும் பல துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்து
    • கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது

    நாகர்ககோவில் :

    கருங்கல் பாலூரில் சிறப்பாக இயங்கி வரும் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்த மாணவர்களுக்கு பிரிவு உபசார கௌரவ நிகழ்வு நடை பெற்றது. அதற்குப் பள்ளித் தலைவர் டாக்டர் கே.தங்கசுவாமி அவர்கள் தலைமை தாங்கிணர்கள். முதநிலை முதல்வர் மற்றும் முதல்வர் முன்னிலை வகித்தனர்.

    அதில், மாணவர்களை வரவேற்றல், இறைவணக்கம், பிரிவு உபசார சிறப்புப்பாடல், சிறப்பு நடனம், ஆர்வமூட்டும் நாடகம், வாழ்த்துரை, வாழ்த்து அட்டை பெறுதல் போன்ற பல நிகழ்வுகள் நடைபெற்றன.

    மேலும், மாணவர்கள் தாங்கள் பள்ளியில் கடந்து வந்த பாதைகள், முன் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டர்கள் அதில், அவர்கள் பள்ளி தலைவரின் எண்ணம், செயல்பாடு, திட்டம், ஆர்வமூட்டும் பண்பு ஆலோசனைகள் ஆகிய அனைத்தும் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது என்று உணர்வுபூர்வமாக கூறியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மாணவர்கள் இணைந்து கேக் வெட்டி மகிழ்ந்தர்கள் பள்ளித் தலைவர் அவர்கள் அனைத்து மாணவர்களும் பல துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்தினர்கள்.

    இந்நிகழ்வானது மாணவர்கள் பள்ளி பருவ அனுபவங்களை எல்லாம் நினைக்கும் விதமாகவும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மேம்படுத்த வழிகாட்டும் விதமாகவும், ஒன்றின் முடிவு தான் அடுத்த நிகழ்வின் தொடக்கமாக அமையும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் தரவரிசை பட்டியலில் உள்ள கல்லூரிகளில் சேர்ந்து படிக்க நெறிப்ப டுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது. விழாயின் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பல்சுவை உணவுகள் வழங்கப்பட்டன.

    மாணவர்கள் ஒழுக்கத்து டன் கூடிய நற்ப ண்புக ளைக் கடைப்பிடித்து சிறப்பாக தங்களுடைய 'பள்ளி பருவத்தை நிறைவு செய்தா ர்கள் என்னும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இன்பச் சுற்றுலா செல்வ தற்கும் ஒழுங்குச் செய்யப்பட்டிருந்தது. இதற்குரிய ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் மேற்பார்வையில் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் மற்றும் இதர பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தார்கள்.

    ஜூன் 22-ந் தேதி பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள ஓய்வு பெறும் நீதிபதி செல்லமேஸ்வரரை பார் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்து அழைப்பு விடுத்தபோது அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். #Justice #Chelameswar
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி ஜே.செல்லமேஸ்வர், ஜூன் 22-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அதனால், கோடை விடுமுறைக்கு முந்தைய கடைசி வேலைநாளான மே 18-ந் தேதி, அவருக்கு பிரிவு உபசார விழா நடத்த சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் முன்வந்துள்ளது.

    இதுதொடர்பாக, கடந்த வாரம், நீதிபதி செல்லமேஸ்வரை பார் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்து அழைப்பு விடுத்தபோது, அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். பார் அசோசியேஷன் செயற்குழு உறுப்பினர்கள், நேற்று நீதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது மனதை மாற்ற முயன்றனர். ஆயினும், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வர இயலாது என்று கூறி விட்டார்.

    இத்தகவல்களை சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் தலைவர் விகாஸ் சிங் கூறினார். நீதிபதி செல்லமேஸ்வர், தொடர்ந்து 3-வது புதன்கிழமையாக நேற்று சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லவில்லை. வழக்குகள் ஒதுக்கீடு தொடர்பாக, தலைமை நீதிபதிக்கு எதிராக பேட்டி அளித்தவர் நீதிபதி செல்லமேஸ்வர் என்பது குறிப்பிடத்தக்கது.  #Justice #Chelameswar 
    ×